கீர்த்தனை
ராகம் -சண்முகப்பிரியா தாளம்-ஆதி
இயற்றியவர்- அடியவன் க. வி.பி
பல்லவி
முருகா என்றே உருகுது மனமே
முத்தமிழ் தலைவா வரம் அருள்வாயோ
அனுபல்லவி
நெடுமால் மருமா முருகா அழகா
குமரா குகனே குன்றாடும் செல்வனே
சரணம்
புள்ளி மயில் ஏறி துள்ளி விளையாடி
வள்ளியுன் நாடி தெள்ளு தமிழ் பாடி
சேவல் கொடியாடி செவ்வேள் உடனேந்தி
செந்தில் செல்வா வரமருள்வாயோ
சரணம் 2
தஜம் என்று தாளம் இசைத்திட
தகதொம் என்று மேளம் அதிர்திட
தோகைமயில் விரித்தாடிய அழகா
தேவர் குறைகளை தீர்த்த குமரா
உந்தன் சித்திர அழகை அடியவன் பாடிட
ஆறுமும் அசைத்தாடியே வா வா
அழகு மயில்மீதேறியே வா வா…
(முருகா..)